பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - சிம்மம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - சிம்மம்

வெற்றி பாதையில் விரைந்து முன்னேற விரும்பும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையும், சனி பார்வையும் பெறுவது தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதிர்கால பலன்களை எண்ணி யோசிக்காமல் நிகழ்காலத்தில் செயல்பட வேண்டிய பணிகளை விரைந்து செய்வீர்கள். அரசியலிலும், பொது வாழ்வில் உங்களின் செல்வாக்கு சிறப்பாக அமையும். மறைமுக எதிரிகள் உங்களிடம் நட்பு கொண்டு விளங்குவார்கள். லாபாதிபதி புதனின் பார்வை லாபஸ்தானத்தில் அமைவதால்.. நன்மையும், பொருளாதார வளமும் பெறுவீர்கள். கலைதுறையில் நினைத்தபடி செயல்பட்டு சிறந்த ஏற்றம் பெறுவீர்கள். இரண்டாமிடத்தில் விரயாதிபதியுடன் கேது இணைவது மேல் படிப்பு செல்பவர்களுக்கு ஏற்றம் பெறும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
12-02-2024 திங்கள் பகல் 02.04 முதல் 14-02-2024 புதன் மாலை 04.41 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-
 
மகம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
எதையும் பிடிவாதமாக செய்யும் நீங்கள் எதிர்கால திட்டங்களை செயல்படுத்த சில நேரம் விட்டு கொடுத்து செயல்பட்டு, மேன்மை பெறுவீர்கள்.
 
பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கலைதுறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தொழில் வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும்.
 
உத்திரம் 1ம் பாதம்:
 
அரசியலிலும், உத்தியோகத்திலும் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். பணபுழக்கம் இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
சிவப்பு, மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
ஞாயிறு, திங்கள், வியாழன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் நாக தேவதையை வணங்கி வேப்பெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள வெற்றி கிட்டும்.